திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள பழங்கனாங்குடி ரிங் ரோட்டில் பழங்கானாங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் சகாயராஜ் (53) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அந்த இரும்பு கடையில் நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் இரும்பு கடையின் கேட்டு ஏறி குதித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய இரும்புகளை கொள்ளையடித்து சென்றதை தனது செல்போனில் சிசிடிவி காட்சிகளை பார்த்த சகாயராஜ்

வீட்டில் இருந்து கடைக்கு சென்று அவரை பிடிக்கும் மேற்பட்டபோது அவர் வருவதற்குள் கொள்ளையன் இரும்புகளை திடிக்கொண்டு சென்று விட்டான். அதன் மதிப்பு 50 ஆயிரம் என கூறப்படுகிறது.

இது குறித்து சகாயராஜ் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர். அப்போது துவாக்குடி பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் அவன் இரும்புகளை விற்றது தெரிய வந்தது. இது குறித்து துவாக்குடி போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments