திருச்சி மாவட்டம், மணப்பாறை ராஜிவ்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பூங்கோதை (70). இவர் தனது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். நேற்று அனைவரும் வெளியில் சென்று விட்ட நிலையில் வீட்டில் பூங்கோதை மட்டும் இருந்துள்ளார்.
மதியம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் திடீரென கத்தியை காட்டி பூங்கோதையை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல் உள்ளிட்ட 14 ½ பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு பின்பு மூதாட்டின் வாய், கைகளில் செல்லோ டேப்பை ஒட்டி விட்டு பின்பு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
பின்னர் வெளியில் சென்றிருந்தவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது பூங்கோதை இருந்த நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதிக குடியிருப்புகள் நிறைந்த நகரின் பிரதான பகுதியில் இந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments