ரோட்டரி 3000 த்தின் கீழ் தாய் சேய் நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா ரோட்டரி கிளப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் மற்றும் இன்னர் வீல் கிளப் ஆப் திருச்சி ராக்போர்ட் சார்பாக இன்று மண்ணச்சநல்லூர் டாக்டர் சிதம்பரநாதன் மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது.
நிகழ்வில் Rtn. டாக்டர் ஆர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
ரோட்டரி கிளப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் தலைவர் ஜோசப் ராஜ் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் Rtn. சுப்பிரமணி, Rtn.முகமது நாசர், Rtn. முகமதுரியாஸ், Rtn.கெளதம், Rtn.பாண்டியன், Rtn.சந்தோஷ், ஆகியோர் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டசத்து பொருட்களான வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை மற்றும் சத்துமாவு, பாசிப்பயிறு, கொண்டகடலை, பேரிச்சம்பழம், கருப்பு உலர் திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இன்னர்வீல் கிளப் ஆப் திருச்சி ராக்போர்ட் தலைவி மார்க்கிரெட் செயலாளர் பிரியா உள்ளிட்டோர் 10 கர்ப்பிணி பெண்களுக்கும் வளையல் அணிவித்து புடவை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கினர்.
கர்ப்பிணி பெண்கள் உட்பட வருகை தந்த அனைவருக்கும் வளைகாப்பு விருந்து உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது. மண்ணச்சநல்லூர் Dr. சிதம்பரநாதன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Rtn. டாக்டர் ஆர் ராமமூர்த்தி அவர்கள் பேசுகையில் இவ்விழாவின் முக்கிய நோக்கம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், சுகாதாரம் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்த ஆலோசனைகளை வழங்குவதே. உங்களுடைய பாதுகாப்பான பிரசவத்திற்கு தம் மருத்துவமனை முன்னின்று உதவி செய்வதாக உறுதி அளித்தார்.
Rtn. சந்தோஷ் நன்றி கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments