விசைத்தறிகளை நவீனமாக்குதல் திட்டம்: விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மூன்று ஆண்டுகள் பழைமையான சாதாரண விசைத்தறிகளை (Conventional Plain Powerlooms) நாடாயில்லா ரேபியர் தறிகளாக (Rapier Shuttleless looms) தரம் உயர்த்த மூலதன மானியங்கள் விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கிறது.
இத்திட்டத்தின் வரையறையின்படி, ஆண்டு தோறும் 3000 விசைத்தறிகளை நவீனமாக்கும் பொருட்டு ரூ.30.00/- கோடி நிதியும், புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் அல்லது பழைய குறைந்த வேக ரேபியர் தறிகளுக்கு மாற்றாக புது ரேபியர் தறிகள் கொள்முதல் செய்திட ரூ.15.00/- கோடியும்,
பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்பரிசோதனை ஆய்வகங்களின் உள்கட்டமைப்புகளை நிறுவும் பொருட்டு ரூ.5.00/- கோடி என மொத்தம் ரூ.50.00/- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி திட்டத்தின் முக்கிய சாராம்சங்கள் கீழே உள்ள படத்தை காணவும்.
மேற்படி திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ள நபர்கள் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு எண்.63/26, பஞ்சவர்ணசுவாமி கோவில் தெரு, உறையூர், திருச்சிராப்பள்ளி 620003. என்ற முகவரியில் செயல்பட்டு வரும் சரக கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட
ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments