சமயபுரம், ஜனவரி 12, 2026:
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், கடந்த 20 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் இன்று எண்ணப்பட்டன.

கோயில் இணை ஆணையர் சூர்யநாராயணன் அவர்கள் தலைமையில், உதவி ஆணையர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில் இந்த எண்ணும் பணி நடைபெற்றது. அதன் முடிவில் பெறப்பட்ட காணிக்கை விவரங்கள் பின்வருமாறு:
ரொக்கப் பணம்: ரூ. 1,50,98,653 (ஒரு கோடியே 50 லட்சத்து 98 ஆயிரத்து 653 ரூபாய்),தங்கம்: 1 கிலோ 008 கிராம்,வெள்ளி: 2 கிலோ 650 கிராம்,அயல்நாட்டு கரன்சி: 225 நோட்டுகள் மற்றும் 1019 நாணயங்கள்

புத்தாண்டு மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு வருகை தந்தனர். நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எண்ணி முடிக்கப்பட்ட காணிக்கை தொகையானது முறைப்படி கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments