Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கை ஒரு கோடியே 32 லட்சம்!!

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம். இந்தத் திருக்கோயிலின் உண்டியல் திறப்பு நாள் 26.02.2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அறங்காவலர் குழுத்தலைவர் திரு. V.S.P. இளங்கோவன், இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் திரு. எம். சூரியநாராயணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திரு.பெ.பிச்சைமணி, திருமதி.இராஜ.சுகந்தி, மற்றும் திரு.சே.லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திருச்சி மற்றும் பெரம்பலூர் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர்கள் திரு. ம. லெட்சுமணன், திருமதி.வி.சுமதி, மற்றும் திருமதி.எஸ். சிந்துலட்சுமி ஆகியோரும்,

மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் திரு. நா. சீனிவாசன் அவர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் இத்திருக்கோயிலின் கண்காணிப்பாளர்கள், செயல் அலுவலர்கள், பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் மற்றும் கொணலை இந்திரா செவிலியர் கல்லூரி மாணவியர்களும் கலந்து கொண்டனர்.
உண்டியல் காணிக்கை விவரங்களின்படி, நிரந்தர உண்டியல்களில் முதன்மை

திருக்கோயில் ரொக்கமாக 1,32,01,424 – 00 ரூபாயும், அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் ரொக்கமாக 22,55,466 – 00 ரூபாயும் பெறப்பட்டது. அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயிலில் 12,145 – 00 ரூபாயும், அருள்மிகு போஜீஸ்வரர் திருக்கோயிலில் 10,254 – 00 ரூபாயும் காணிக்கையாகக் கிடைத்தன. இவை தவிர, பொன் இனம் 01- 609 கி.கி. அளவிலும், வெள்ளி இனம் 04- 126 கி.கி. அளவிலும் பெறப்பட்டன. இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள் 12.02.2026 ஆகும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *