Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்? – திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பேட்டி

திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ்…… பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜீன் 1 ஆம் தேதியும் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஜீன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். தமிழக முதல்வர் அதில் ஏதும் மாற்றம் அறிவித்தால் கடைபிடிக்கப்படும்.

இந்த வருடம் பள்ளிகள் திறந்த தேதியில் இருந்து மாணவர்களுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் 100 சதவீதம் வழங்கப்படும். தற்பொழுது மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு இந்த புத்தகங்கள், பொருட்கள் அனைத்தும் வந்துவிட்டது. முக்கியமாக பள்ளிகளுக்கான வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகள் அதிக விபத்துகள் நிகழ்ந்தது போல் இந்த ஆண்டுகள் நிகழாமல் இருக்க அனைத்தும் முறைபடுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து நானும் அது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளேன். முக்கியமாக பள்ளி கட்டிடங்கள் தற்பொழுது 185 ஊராட்சிகளில் அதற்கான கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி உதவியுடன் பணிகள் நடைபெறும்.

35 அமைச்சர்கள் உள்ளனர் அவர்களள் தங்கள் துறை பணிகளுக்காக நபார்டு திட்டத்தின் கீழ் அவரவர் துறை பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும். அவ்வாறு வசூலிக்கப்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே கட்டப்பட்டு வரும் முத்தரையர் மணிமண்டபம் மீதமுள்ள பணிகள் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு அதற்கான தேதி வாங்கப்பட்டு திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் உறுதியளித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *