திருச்சி விமான நிலைய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலம் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் புனிதா, மணிமேகலை மற்றும் ஜான்சிராணி ஆகியோர் (20.7.2023) இன்று கே.கே.நகரில் அருவி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இரத்த சர்க்கரை ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டனர். சுமார் 6 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்த மற்றும் 7 நீரிழிவு நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக 3 பேரை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டது. மேற்கண்ட முகாமை டாக்டர் சலாம், செண்பகவல்லி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். மருத்துவமனை பொறுப்பாளர் ஷீலா பணியாளர் செவிலியர் ஆகியோருக்கு முதியோர் இல்லத்தினர் நன்றி தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments