கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தமிழகத்தில் 6000 கோடி வரை பணம் இருப்பில் உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் வழங்குவது போல தமிழ்நாடு அரசும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக ஊக்கத் தொகையாக ரூபாய் 5000 வழங்க கோரி

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர், தொழிலாளர் நலத்துறை செயலாளர், தொழிலாளர் நல ஆணையர் ஆகியோருக்கு தனித்தனியாக கோரிக்கை விண்ணப்பத்தினை பதிவுத் தபாலில் தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள்,

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் அனுப்பி வருகின்றனர். திருச்சிராப்பள்ளி தலைமை தபால் நிலையத்தில்பதிவு தபால் அனுப்பும் நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் க.சுரேஷ் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தலைவர் முருகன், துணைத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments