Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's identities

புதிய பொலிவு பெரும் திருவெறும்பூர் சாந்தி திரையரங்கம்

திருச்சியில் எத்தனையோ பழமையான இடங்கள் இருந்தாலும் பொழுதுபோக்கு என்று வரும்பொழுது திரையரங்குகள் தனி இடம் பிடிக்கின்றன!!

அதிலும் திருச்சி திருவரம்பூர் பகுதி சாந்தி தியேட்டருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்தது.

திருச்சி மக்களின் வாழ்க்கையோடு இணைந்த சாந்தி திரையரங்கம் 1986 சித்திரை 1 தமிழ் வருட பிறப்பு அன்று தொடங்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஜி கே மூப்பனார் அவர்களால் திரையரங்கம் திறக்கப்பட்டது.

திரையரங்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற அனைத்து திரைப்படங்களும் திரையரங்கத்தில் திரையிடப்பட்டு வசுல் வேட்டையை கண்டுள்ளது.

சாந்தி தியேட்டருக்கு என்று தனித்த ரசிகபட்டாளம் இருந்தபோதிலும் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் திரையரங்குகளில் மக்களின் வருகை குறையத்தொடங்கியது.

மக்களின் விருப்பத்திற்கேற்றார்போல் புதிய தொழில்நுட்பங்களை திருச்சி சாந்தி திரையரங்கிலும் கொண்டுவர வேண்டும் என்பதற்காக தற்போது திரையரங்கமானது புதுமையான பொலிக்கான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

திரையரங்கத்தின் புதிய சிறப்பம்சம் குறித்து திரையரங்க மேற்பார்வையாளர் கார்த்திக்கிடம் பேசியபோது, 

“கடந்த மார்ச் மாதம் திரையரங்கத்தின் சீரமைப்பு பபணிகள் தொடங்கியது,முழுமையாக பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வரும் பொங்கல்(ஜனவரி -2022) திரையரங்கம் திறக்கப்படும்.  

முன்பு இருந்ததை விட அளவில் பெரிய திரைச்சீலைகள், 4K பிரொஜக்டர் தொழில் நுட்பத்துடனும், 3d தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையிலும்,Dolby ATOMS தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழ் திரைப்படங்கள் மட்டும் வெளியிடப்பட்டது இனி அனைத்து மொழி திரைப்படங்களும் திரையிட இருக்கிறது.

முன்பின் நகரும் விதத்தில் மக்களுள்க்கு வசதியான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.மொத்தம் 324 இருக்கைககள் விசாலாமான அமைப்பில்வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் பார்க்க வரும் மக்களுக்கு பார்க்கிங் வசதி, இடைவெளிகளில் தரமான பாதுகாப்பன திண்பண்டங்கள் கிடைக்கும் வகையில் கேன்டீன்களில் அமைந்துள்ளோம்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது,

“திருச்சியில் சாமானிய மக்களின் திரையரங்கம் ஆக சாந்தி திரையரங்கம் இருந்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் புதிய பொலிவுடன் அதனுடைய அமைப்பு மட்டுமே மாறும், தனித்துவம் என்றும் மாறாமல் சாமானிய மக்களின் திரையரங்கம் ஆகவே செயல்படும்” என்றார்.

பழைய திரையரங்குகள் அனைத்தும் தற்போது வணிக வளாகங்களாக மாறிவரும் நிலையில் சாந்தி திரையரங்கை சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வருவதால் இப்பகுதி மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே!!

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *