திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்தில் உள்ள அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையம் பகுதியில் இருக்கும் துப்பாக்கி சுடும் இடத்தில், ஆகஸ்ட் 4 தேதி முதல் 11 தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது.

இந்த பயிற்சி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மேலும் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
இந்த நேரங்களில் அந்த இடத்தில் யாரும் செல்லக் கூடாது.
கால்நடைகளை மேய்க்கவும் அனுமதி கிடையாது.
பயிற்சி நடைபெறும் இடத்திற்கு மனிதர்கள் அல்லது மாடுகள் நுழையக்கூடாது.

இது பாதுகாப்பு காரணமாகும் என மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision






Comments