திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் காலை நேரங்களில் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பயணிகள் வருகை புரிகின்றனர். அதிகாலையில் இருந்தே பல்வேறு பணிகளுக்காக வரும் மக்கள் எண்ணைய் கலந்த பலகாரங்களை உணவாக எடுத்துகொள்வதை கவனத்தில் கொண்ட சமூக ஆர்வலர் அல்லூர் திருவேங்கடம் இதுகுறித்து முதலமைச்சர் தனிபிரிவிற்கு மனு அளித்துள்ளார்.
அதற்கு முதலமைச்சர் தனிபிரிவில் இருந்து பதில் கடிதமும் கிடைத்துள்ள நிலையில் இதுகுறித்து அவரிடம் பேசினோம். எனது பணி காரணமாக தினமும் காலையில் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பயணிப்பேன். அப்போது தான் பொதுமக்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் ஆரோக்கியமற்ற உணவுகள், தின்பண்டங்களை உண்பதை கவனிக்க முடிந்தது அவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இது சம்பந்தமாக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.
அதில் ‘தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்து நிலையத்திலும் காலை நேரங்களில் சிறுதானிய உணவு வகைகள் விற்பனை இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதாவது முளைக்கட்டிய பயிர் வகைகள் கொண்டைக்கடலை, சுண்டல் வகைகள், சிறுதானிய புட்டு வகைகள், இயற்கை மூலிகை சூப் வகைகள் போன்றவற்றின் விற்பனையை கட்டாயம்
ஏதாவது ஒரு துறையின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும், இதன் மூலம் பொதுமக்களும் பயன் அடைவார்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகும் என்றும், பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து உணவாக அமையும் என்றும் மனு அளித்துள்ளேன் என்றார்‘.
இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சரின் தனி பிரிவு மகளிர் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் மகளிர் சுயஉதவி குழுக்களில் இதுகுறித்து தெரிவித்து விருப்பம் உள்ள குழுக்களின் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்று பதிலளித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments