“பசுமை பணியில் பசுமை பதவி – திருச்சி ராஜேஸுக்கு பெருமை”-தேசிய லஞ்சம் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு இயக்கத்தில்(ACVM) தென்னிந்திய பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ள திருச்சி ராஜேஷ் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் பொழுது பள்ளிக் காலத்தில் தேசிய பசுமை இயக்கத்தில்
(NGC) ஈடுபட்டு. கல்லூரி காலத்தில் தேசிய சேவை திட்டம்(NSS) ஈடுபட்டுள்ளேன். துளசி பசுமை இயக்கம் என்ற அமைப்பின் மூலம் கிராமங்களில் பனை விதைகள் விதைப்பு ஏற்படுத்தி கொண்டிருக்கிறே ன்.ஜல்லிக்கட்டு,காவிரி நதிநீர் பிரச்சனை போராட்டம் போன்றவற்றில் முனைப்புடன் கலந்துள்ளேன்.
*வீழாத்தமிழன் மற்றும் களத்தில் வென்றான்* குறும்படங்களில்
நடித்து வெளியிட்டு அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளேன்.
தற்போது ஏழ்மையின் உலகம் அறக்கட்டளையுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்கள் உணவு மற்றும் தேவையான உதவி செய்து வருகிறோம். எனது எண்ணத்தில் சமூக அக்கறை கலந்துள்ளதை அறிந்த ஐயா டாக்டர் ராஜமோகன் அவர்கள் தேசிய லஞ்சம் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு இயக்கத்தில்(ACVM) தென்னிந்திய பொதுச் செயலாளராக பதவி அளித்துள்ளார் என்பதை மனம் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில இணை பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த என்னை தற்பொழுது தென்னிந்திய பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறேன்.இயக்கத்தில் பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன்.என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments