Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாநகரில் காணாமல் போனதாக பதியப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு முகாம் நடத்திட திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவிட்டதன்பேரில் நாளை (01.09.2024)-ந் தேதி திருச்சி மாநகரில் உள்ள 6 காவல் சரகங்களில் காணமால் போனவர்களை (Missing Cases Mega Mela) திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் மனுதாரர்கள் காணாமல் போனவர்களின் புகைப்படம், அடையாள அட்டை மற்றும் இதர விவரங்களுடன் கலந்து கொள்ளுமாறு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த முகாமில் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் அடையாளம் தெரியாத நபர்களின் இறப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இறந்து போன நபர்களின் புகைப்படங்களை சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்யப்பட்ட திரையில் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரையில் காண்பிக்கப்படும் புகைப்படங்களோடு மனுதாரர்கள் தங்களது காணாமல் போன உறவினர்களின் புகைப்படங்களை ஒப்பீடு செய்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

இம்முகாமிற்கு மனுதாரர்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக திருச்சி மாநகரில் உள்ள 6 காவல் சரகத்திலும் கீழ்கண்டவாறு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *