திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அதிவேகமாகவும் இரு சக்கர வாகனங்களை இயக்கிய வந்த 3 நபர்கள் காவல்துறை வாகனத்தை கண்டதும் அதிவேகமாக கடக்க முயன்றபோது கொள்ளிடம் காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து அதிவேகமாக செல்வதால் ஏற்படும் சாலை விபத்துக்கள் மற்றும் இழப்புகள் குறித்து எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments