Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பெண் முகத்தில் ஸ்பிரே அடித்து 5 பவுன் தாலி செயின் பறிப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொது துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் பெல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் மருத்துவ வசதி பெரும் வகையில் மருத்துவமனை உள்ளது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் பாலகிருஷ்ணனின் மனைவி தமிழ்ச்செல்வி (65) என்பவர் பெல் மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை செய்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழ்செல்வி மருமகன் வடிவேல் பெல் ஊழியராக உள்ளார். அவருடன் அவரது நான்காம் வகுப்பு படிக்கும் பேரன் (சூர்யப்பிரகாஷ்) துணைக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மஞ்ச கலர் டீசர்ட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் காலில் கட்டு போட வேண்டும் அதனால் கழுத்தில் இருப்பதெல்லாம் கழட்டுங்கள் என்று கூறியதாகவும் ஆனால் கழுத்தில் இருப்பதை தமிழ்செல்வி கழட்ட முடியாது எனக் கூறியதை தொடர்ந்து தமிழ்செல்வி முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு தமிழ்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். தமிழ்ச்செல்வியும் அவரது பேரனும் கூச்சலிட்டுள்ளனர். உடனே மருத்துவமனை ஊழியர்களும் நோயாளிகளோடு இருக்கும் உதவியாளர்களும் ஓடி வந்து பார்த்த பொழுது அதற்குள் அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டான். இச்சம்பவம் குறித்து பெல் போலீசாருகு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெல் வளாகத்தில் ஒரே நாளில் 5 வீடுகளில் கொள்ளை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாகவே பட்டப்பகலில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் புகுந்து தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் பெல் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *