திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இரண்டாம் நாள் ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
Advertisement
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் கொரோனா பரவலால் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் விழாக்கள் கோயில் உள்பிரகாரகளில் நடைபெற்றது.
கடந்த மாதம் கோவில்களை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உற்சவ விழா நேற்று துவங்கியது.
இரண்டாம் நாளான இன்று நம்பெருமாள் முத்து வளையம் மற்றும் வைர அபய ஹஸ்தம் அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
Advertisement
கொரோனா அச்சத்தால் ஊஞ்சல் மண்டபத்தில் பேரி காடுகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Comments