எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், திருச்சிராப்பள்ளி, நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 07 அன்று எஸ்.ஆர்.எம் கலையரங்கத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இவ்விழாவில் பட்டம் பெற்ற 260 மாணவர்கள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.


இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர், எஸ்.கிருஷ்ணன், IAS பங்கேற்று பட்டமளிப்பு விழாப் பேருரை ஆற்றினார். அவர் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டதுடன், தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு உள்ள அரிய வாய்ப்புகளை எடுத்துக்கூறினார்.

5G, 6G, மற்றும் LI-Fi போன்ற தொழில்நுட்பங்கள் உற்பத்தி முதல் மருத்துவம் வரை பல துறைகளில் முக்கியதத்துவம் பெற்றுள்ளதை விளக்கினார். தன்னம்பிக்கையும் தொடர் கற்றலுமே வாழ்வின் சாதனைகளுக்கு வழிவகுக்கும் என்று வலியுறுத்தினார். AT & T சென்னை நிறுவனத்தின் மின்னணு பொறியியல் மற்றும் உற்பத்தி மேலாண்மை இயக்குநர் டாக்டர்.பொன்னுசுந்தர் முருகையா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொறுமையும் முழுமையான அர்ப்பணிப்புமே எந்த ஒரு செயலையும் வெற்றிப் பெற செய்யும் என்றும் பட்டம் பெறும் மாணவர்கள் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளுக்கும் நம்பிக்கைக்குமான அடையாளம் என்றும் கூறினார்.

எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.சிவகுமார், துணைத் தலைவர் டாக்டர்.நிரஞ்சன், துணைவேந்தர் டாக்டர்.முத்தமிழ் செல்வன், தலைமை இயக்குநர் டாக்டர்.சேதுராமன், நிர்வாக இயக்குநர் டாக்டர்.சம்பந்தம், உதவி இயக்குநர் டாக்டர்.சிவகுமார் மற்றும் அனைத்து புல முதன்மையர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

எஸ்.ஆர்.எம்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், புல முதன்மையர் டாக்டர். ஆர். ஜெகதீஷ் கண்ணன், வரவேற்புரையும் ஆண்டு அறிக்கையையும் வழங்கினார். விழாவில் பட்டங்கள் வழங்கப்பட்டதுடன், சுல்வியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் தங்கள் பட்டங்கள், பதக்கங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு குழு புகைப்படம் எடுத்த பின்னர் இவ்விழா இனிதே நிறைவுற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments