Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி புனித மரியன்னை பேராலய தேர்பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

திருச்சி மாநகரில் மேலப்புதூர் பகுதியில் அமைந்துள்ள புனித மரியன்னை பேராலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும், இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழாவானது கடந்த 30ம்தேதி வெகுவிமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவில் தினசரி மறையுரை, நவநாள் திருப்பலிகள், நற்கருணை ஆசிர்வாத நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் பத்தாம் நாளான நேற்றிரவு தேர்பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது. தேர்பவனியைமுன்னிட்டு ஆலய பங்குத்தந்தை சவரிராஜ் தலைமையில் சிறப்புபாடல் திருப்பலி நடைபெற்றது.

அதன் பின்னர் மின்விளக்குகளாலும், வண்ண பூக்களாலும் அலங்காரிக்கப்பட்ட 3 ஆடம்பரத்தேரில் புனித மரியன்னை மற்றும் காவல் தெய்வம் சம்மனசு, சூசையப்பர் ஆகியோர் எழுந்தருளி இருந்தனர். பாளையங்கோட்டை ஆயர் ஜுடு பால்ராஜ் தேரினை அர்ச்சித்து புனிதப்படுத்தி தொடங்கிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து பெருந்திரளான கிறிஸ்தவ பங்கு மக்கள் பங்கேற்று பாடல்களை பாடியபடி செல்ல, புனிதமரியன்னை ஆலயத்திலிருந்து தொடங்கிய தேர்பவனி வீதிஉலாவந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

மேலப்புதூர் புனித மரியன்னை தேர்பவனி திருவிழாவில் கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மாற்றுமதத்தினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *