திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம்மாத்தூர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சென்ற வாரம் புதன்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை இடைவிடாமல் பெய்த கனமழை பள்ளி சுற்றி மழைநீர் சூழ்ந்து உள்ளது.
பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். மாவட்ட நிர்வாகம் இந்த அவலநிலையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments