சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தெரு நாய் தொடர்பான அறிவிப்பு வெளிவந்தது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் வனவிலங்கு ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பினர். மேலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாகவும்
இன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதி கிராப்ட் முன்பு பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் மாவட்ட தலைவர் ஹரிணி தலைமையில் தெரு நாய்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் அஜய் மற்றும் நிர்வாகிகள் ராம் ப்ரியா அர்ச்சனா மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments