திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு கீழ கள்ளுக்குடி பகுதியில் தெரு விளக்கு இல்லை எனவும், மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் ஆண்டுகள் சென்ற நிலையில் ஒருவழியாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சில மின் கம்பங்களில் பேரூராட்சி சார்பில் தெரு மின்விளக்கு பொருத்தப்பட்டது. ஆனால் சிறிதும் பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி ஊழியர்கள் காய்ந்த மரக்குச்சிகளை பயன்படுத்தி மின் விளக்குகளை பொருத்தி சென்றுள்ளனர்.
இதனை திகைப்புடன் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அதற்கு போதிய நிதியும், மின் உபகரணங்கள் பற்றாக்குறை இருப்பதால் விரைவில் மின்விளக்கு மாற்றியமைக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தரமான வகைகள் பணிகளை செய்ய வேண்டிய அரசு ஊழியர்கள் இதுபோன்று அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பகுதியில் இது போன்று செய்வார்களா? கடமையை செய்ய வேண்டிய மின்சார வாரியம் கடமைக்கு அலட்சியமாக மின்விளக்கு பொருத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments