திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது சுகாதாரத்தை பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், சாலைகளில் பரோபரியாக சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்க கோரியும் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்படுவதாகவும், பல புகார்கள் வருவதை தொடர்ந்து சாலைகளில் பரோபரியாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து இ.பி ரோட்டில் அமைந்துள்ள இம்மாநகராட்சியின் பட்டியில் பாதுகாத்து பராமரிக்கும் பணிகள் வெளிக்கொணர்வு முறையில் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலைகளில் பரோபரியாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடித்து கால்நடை உரிமையாளர்களிடம் ஒரு மாட்டிற்கு ரூ.2500/- அபராதம் பெற்று எச்சரிக்கை செய்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மேலும் பிடிக்கப்பட்ட மாடுகள் ஒரு வாரத்திற்கு மேலாகியும் உரிமையாளர்கள் திரும்ப பெறவில்லை எனில் ஏலம் விடப்பட்டு வருகிறது.
இம்மாநகராட்சியில் ஜனவரி-2023 முதல் தற்போது வரை 1368 மாடுகள் பிடித்து கால்நடை உரிமைதாரர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிமை கோராத 68 கால்நடைகள் பொதுஏலம் விடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது சுகாதாரத்தை பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதமும்,
காவல்துறையின் மூலம் கால்நடை உரிமைதாரர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று கூறினார் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments