நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் இன்று (07.09.2025) திருச்சிராப்பள்ளி காட்டூர் மாண்ட் போர்ட் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற 2982 அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற 142 மாணவ, மாணவிகள் என மொத்தம் 3124 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன் அவர்கள், மண்டல தலைவர் திரு.மு.மதிவாணன் மதிவாணன், இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை முனைவர் ச.கண்ணப்பன், இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்கம் முனைவர் பூ.ஆ.நரேஷ், இயக்குனர் அரசு தேர்வுகள் இயக்கம் திருமதி க.சசிகலா,
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் துணைத் தலைவர் திரு. முத்துக்குமார், இணை இயக்குனர் பள்ளிக்கல்வித்துறை திருமதி சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி கிருஷ்ண பிரியா, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments