தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று (20.11.2024) மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களூர் SRM பல்கலைக்கழக மருத்துவகல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற

போதையில்லா திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை உருவாக்கிட மாணவர்கள் மாணவத் தூதுவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.


இதனை தொடர்ந்து இன்டர்லாக் கல் தயாரிக்கும் தொழிற்கூடத்தில் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இருங்களூர் தூய அன்னாள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

பின்னர் புனித ஜான் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments