திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மேயர் மு. இன்று உதவி ஆணையர், செயற்பொறியாளர் சுகாதார அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கவும், சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பிடம், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் நடைபாதைகளில் அங்கு உள்ள கடைக்காரர்கள் குப்பைத்தொட்டி வைக்காமல் நடைப்பாதைகளில் குப்பையை கொட்டி, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதை அகற்றி கடைக்காரர்களுக்கு ரூ.2000 அபதாரம் விதிக்கப்பட்டது.

அதேபோல் பொதுமக்கள் பேருந்து நிலைய பகுதிகளில் குப்பைகளை போட்டால் அபராதம் விதிக்க சுகாதார அலுவலருக்கு அறிவுரை வழங்கினார். தினந்தோறும் இளநிலை பொறியாளர் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிகிறதா என்று கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் நடைபாதையில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், பேருந்து நிலையப் பகுதியை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையர் ஜெயபாரதி, உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments