திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியதால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து செல்கிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனை தொடர்ந்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு, மாவட்ட ஆட்சியர் நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.
இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி 62வது வார்டில் புதிதாக போடப்பட்டு ஓர் நாள் மழையால் பழுதடைந்துள்ளது. இப்பகுதியில் 62வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி மாவட்ட செயலாளருமான செந்தில் குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
சாலைகளில் தேங்கிய மழை நீரை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வெளியேற்றா விட்டால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் வெளியேற முடியாத இடங்களில், நீச்சல் போட்டிகள் நடத்தப்படும் என செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments