கோபி என்பவர் தனக்கு சொந்தமான பத்தாயிரம் சதுர அடி இடம் கேகே நகர்
பகுதியில்
இருந்துள்ளது அது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என ஆவணங்களில் மாறி இருந்தது இது தொடர்பாக அது தனக்கான இடம் அதற்கான ஆவணங்களை வைத்துள்ளேன் என
திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை நாடி உள்ளார் அதன் பிறகு உங்களுடைய பெயருக்கு அதாவது கணிப்பொறி எஸ் எல் ஆர் இ ஏற்றி தர லஞ்சம் வேண்டுமென வருவாய் கோட்டாட்சியரின் உதவியாளர் பட்டாசு அண்ணாதுரை கேட்டு உள்ளார் எவ்வளவு லஞ்சம் என கேட்ட பொழுது 2 லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சொல்லி உள்ளார்.
இதனை அடுத்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறை நாடி அவர்கள் கூறியது போல் இரண்டு லட்ச ரூபாயை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அண்ணாதுரை இடம் கொடுக்கும் பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் ஆய்வாளர் சக்திவேல் ஆய்வாளர்கள் அதிரடியாக கைது செய்தனர் தொடர்ந்து வருவாய்
கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அண்ணாதுரை இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர் லஞ்ச ஒழிப்பு துறையினர் 2 லட்ச ரூபாயை வட்டாட்சியர் லஞ்சமாக பெற்றது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments