தமிழக முதலமைச்சர் திருச்சி வருகை- பாதுகாப்பு கருதி விமான நிலையத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

trichy tamilnadu cm mkstalin airport drones

தமிழக முதலமைச்சர் திருச்சி வருகை- பாதுகாப்பு கருதி விமான நிலையத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.

 தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்ல  திருச்சி விமான நிலையத்திற்கு நாளை (22.10.2024)மாலை வருகை தரவுள்ளதால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி இன்று (21.10.2024 ) முதல் தமிழ்நாடு முதலமைச்சர்  பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் நாளை (22.10.2024) நாமக்கல் மாவட்டத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து சென்னை செல்லவுள்ளதால் மேற்சொன்ன வழிகளில் எந்தவித ட்ரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்படுகிறது.

எனவே இன்று 21.10.2024 முதல் 22.10.2024 வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய... 

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision