Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழக அரசு கவனத்துடன் இந்த நிகழ்வை கையாண்டிருக்க வேண்டும்; தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு

கரூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் மீளா துயரத்துடன் கனத்த இதயத்துடன் கரூருக்கு சென்று கொண்டிருக்கிறேன். எதிர்பாராத சோக நிகழ்வு மாலை வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்து கொண்டிருந்த நேரத்தில் அதன்பின் வந்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்க கூடிய செய்திகளாக இருந்தது. உயிரிழப்புகள் இருக்கக் கூடாது என நினைத்தாலும் உயிரழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வேதனையை தருகிறது. இப்போது நாம் அந்த குடும்பங்களுக்கு ஆதரவாக எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு இருக்க வேண்டும்.பிஜேபியை பொறுத்தவரை அங்குள்ள குடும்பங்களுக்கு என்ன தேவைப்படுகிறது, என்ன ஆதரவு தேவைப்படுகிறதோ மருத்துவ உதவிகள் போன்றவற்றை அவர்களுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நான் வந்துள்ளேன். இந்த நிகழ்வு நடந்திருக்கக்கூடாது அரசு இன்னும் கவனத்துடன் இதை கையாண்டிருக்க வேண்டும். கூட்டம் என்று வரும் பொழுது இவ்வளவு பேர் வருவார்கள் அவர்களை எப்படி சமாளிப்பது கூட்டம் நடக்கின்ற இடங்களில் ஒருவேளை விபத்து ஏற்பட்டால் அதை எப்படி தயார் நிலையில் இருந்து சரி செய்வது என்பது அவசியமாகிறது. இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க நிறைய கூட்டங்கள் நடைபெறும் அரசு இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

இந்த விஷயத்தை பொறுத்த வரை அரசு விசாரணை நடத்த வேண்டும் நாம் அப்படி நடந்த இப்படி நடந்ததா எதனாலே சம்பவம் நடைபெற்றது என்பதை அலசுவது தேவையற்றது. முதலில் நாம் மக்களுக்கு நல்லது செய்வதற்கு செல்வோம் அதன் பின் யார் மீது தவறு என்பது விசாரணையில் தெரியவரும்.எது எப்படி இருந்தாலும் உயிரிழப்புகள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

எங்கு கூட்டம் வந்தாலும் அந்த கூட்டங்களை எதிர்நோக்கி அதற்குண்டான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை . நான் இவ்வளவுதான் எதிர்பார்த்தேன் அதிகமாக வந்து விட்டார்கள் அதனால் உயிரிழப்பு ஏற்பட்டது எனக் கூறுவது ஒரு காரணமாக இருக்காது‌.எங்கு தவறு நடந்தது என்பதை விட இது நடந்ததே தவறு. நான் வேதனையில் உள்ளேன் அந்த வேதனையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றார்

தமிழக அரசு உடனடியாக அங்கு விரைந்து சென்றுள்ளது , மேலும் உயர்ந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளது என கேட்டபோது இதில் நான் கருத்து கூற விரும்பவில்லை உயிரிழப்புகள் நடந்திருக்கக்கூடாது

இதற்கு காரணமான விஜய்யை கைது செய்ய வேண்டுமா? எனக் கேட்டபோது அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.மக்களுடன் நாம் உள்ளோம் சென்சேஷனாக இருப்பதை விட இந்த நேரத்தில் சென்ஸ் உடன் இருக்க வேண்டும் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *