நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சார சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் இன்று (27.09.2025) விஜய் திருச்சி வந்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுதும் இருக்க கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை துவங்கியுள்ளனர்
தவெக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற தலைப்பில், தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று செப் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்
அதாவது கடந்த வாரம் 13 ஆம் தேதி திருச்சியில் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் . திருச்சி மாவட்டம் திருப்புமுனை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கூறி வந்த நிலையில் விஜய் திருச்சியில் பிரச்சாரம் ஆரம்பித்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது
அவர் அடுத்தபடியாக இரண்டாம் கட்டமாக பிரச்சாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மூன்றாவது வாரமாக தனது பரப்புரைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் இன்று காலை 9:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்திருக்கிறார்.
திருச்சியில் இருந்து கார் மூலம் நாமக்கல்லில் பரப்புரை செய்த பின்பு இன்று மாலை கரூரில் தனது பரப்புரையை முடிக்கிறார். கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது பரப்புரையை தொடங்கிய விஜய் 20 ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை முடித்தார் குறிப்பாக மூன்று வாரங்களும் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வந்த பிறகு தனது பரப்புரையை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார்.
ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை சனிக்கிழமை அரசியல்வாதி என பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தனது பரப்புரையை தொடர்ந்து செய்து வருகிறார்.
ஏற்கனவே டிசம்பர் மாதம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது பரப்புரை என்பது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.
விஜய் திருச்சி விமான நிலையம் வருகை தருவதால் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் விமான நிலையத்திற்குள் பயணிகளைத் தவிர பொதுமக்கள், தொண்டர்கள் , ரசிகர்கள் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments