"மத்திய அரசின் உதவியும் துணையும் தேவைப்படுவதால் தான் தமிழக அரசு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது" - தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!!

"மத்திய அரசின் உதவியும் துணையும் தேவைப்படுவதால் தான் தமிழக அரசு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது" - தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் அச்சங்கத்தின் மாநில தலைவர் குணசேகரன், பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் மற்றும் மாநில நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமாணிக்கம்,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.இனியும் போராட்டம் நடத்தப்படும்.இந்த சட்டங்களால் விவசாயிகள் ஏமாற்றப்படுவார்கள்.இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் சாதகமாக உள்ளது.விவசாயிகளும்,விவசாய நிலங்களும் பெரு முதலாளிகள் வசம் சென்றுவிடும்.

Advertisement

ஒப்பந்த சாகுபடி முறையின் மூலம் விவசாயிகள் எந்த மாநிலத்திலும் விற்கலாம் என சட்டம் கூறுகிறது.ஆனால் சிறு குறு விவசாயிகள் வெளி மாநிலத்திற்கு கொண்டு சென்று வந்து விற்க முடியாது.ஆனால் மத்திய மாநில அரசுகள் இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை தான் என கூறுகிறார்கள்.அது முற்றிலும் தவறானது.தமிழக அரசுக்கு மத்திய அரசின் துணையும், உதவியும் தேவைப்படுவதால் தான் இந்த சட்டங்களை ஆதரிக்கிறார்கள்.அவர்கள் இந்த சட்டங்கள் குறித்து கூறுவது அனைத்தும் தவறு.

Advertisement

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 12 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும்.அக்டோபர் 15 ஆம் தேதி கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்போம் என்றார்.