திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கீழ தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு நடந்துள்ளது. நண்பர்கள் மத்தியில் சதீஷை தாமரைச்செல்வன் அடித்து அவமானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சதீஷ் தனது நண்பர் பிரபாகரன் உள்ளிட்டோரிடம் தகவல் கொடுத்து இவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். இன்று காலை திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தாமரைச்செல்வனை சதீஷ் உள்ளிட்ட 5 பேர்
அரிவாளால் வெட்டிய பொழுது காவலர் குடியிருப்புக்கு உள்ளே தப்பி ஓடி வந்து முதலில் தரைதளத்தில் இருந்த வீட்டின் உள்ளே ஓடு உள்ளோர்.
அப்போதுதான் செல்வராஜ் மகள் குப்பையை கொட்டி விட்டு வந்த பொழுது தாமரைச்செல்வன் உயிரை காப்பாற்ற வீட்டில் உள்ளே வந்துள்ளார். ஐந்து பேரும் பின் தொடர்ந்து வந்த போது குடும்பமே இவர்களை உள்ளே விடாமல் கதவை அடைக்க முற்பட்ட பொழுது கதவைத் தள்ளி உள்ளே சிறு குழந்தைகள் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் முன்னிலையில் இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் எவ்வளவோ குடும்பத்துடன் சேர்ந்து தடுத்தும் அவர்களால் இந்த கொலையை தடுக்க முடியவில்லை செல்வராஜின் மனைவி தாமரைச்செல்வனை காப்பாற்ற முற்பட்ட பொழுது அவரையும் அரிவாள்லால் வெட்ட கை ஓங்கி உள்ளனர் பின்னர் தப்பி ஓடியவர்கள் குடியிருப்பில் இருந்தவர்கள் கற்கள் கட்டைகளை எடுத்து வீசும் பொழுது
உங்களையும் வெட்டி விடுவோம் என்று கூறி தப்பி ஓடி உள்ளனர் காவலர் குடியிருப்பு ஐந்து நிமிடத்தில் பதட்டமானது கொலை சம்பவம் நடந்த வீடு குடியிருப்பு பகுதியில் ரத்தம் சிந்தி கிடந்தது.
அந்த வீடு திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவரது வீடு ஐந்து பேரும் உள்ளே புகுந்து கண் இமைக்கும் நேரத்தில் தாமரைசெல்வனை சரமாரியாக வெட்டி விட்டு ஓடினர்.தப்பியோடிய போது அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நான்கு பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சதீஷ் பிரபாகரன் நந்து,கணேசன் நான்கு பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments