Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சாதி வன்முறைகள் அதிகரித்தது திராவிட இயக்கங்களின் தவறான கொள்கை காரணம் – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

கவின் ஆணவ கொலையை கண்டித்து புதிய தமிழக கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். டாக்டர் சிவா கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம்,மாவட்ட செயலாளர் பாலு ஆகியோர் வரவேற்றனர் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அறிவழகன்,சதீஷ் ராசு, தினகரன்,பிச்சைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசிய  கிருஷ்ணசாமி கூறுகையில் :-

கவின் ஆணவ படுகொலை சம்பவத்தில் சிபிசிஐடியின் விசாரணை திருப்திகரமாக இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். கடந்த 2011ம் ஆண்டு முதல் 16 ம் ஆண்ட வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவ படுகொலைகள் நடந்து வந்தது. இது தொடர்பாக அப்போது இருந்த அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்பொழுதும் இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது.எனவே தமிழக அரசு ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

இந்த சட்டத்தில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக நடத்தி தீர்ப்பு வழங்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் ஆணவ படுகொலைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவில் சாதி மறுப்பு திருமணமும் குறைவாக நடைபெறும் மாநிலம் தமிழகம்தான், திராவிடம் மற்றும் முற்போக்கு பேசும் தமிழகத்தில் இரண்டு மூன்று சதவீதம் மட்டுமே சாதி மறுப்பு திருமணம் நடைபெறுகிறது, 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திராவிடர் இயக்கங்கள் போலி வேடம் பூண்டு தங்களது கொள்கைக்கு உண்மையாக இல்லாததால் சாதிய வன்முறைகள் அதிகரித்து உள்ளது. திராவிட இயக்கங்கள் தங்களது கொள்கையிலிருந்து விலகி செயல்பட்டு கொண்டு இருப்பது கண்கூடாக தெரிகிறது. திராவிட கட்சிகளின் கொள்கைகளால் தான் தற்போது கொலைகள் செய்யப்பட்டுவருகிறது என குற்றம்சாட்டினர்.

திருச்சியில் இன்று மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தற்பொழுது பேசுவதற்கு ஒன்றுமில்லை என கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *