Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது – திருச்சியில் திருமாவளவன் பேட்டி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது…. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற செயற்குழுவில் 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாக இருக்க வேண்டும் என தீர்மானத்தை பொறுத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. 

திமுக கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி. இந்நிலையில் எதிர் கட்சிகள் ஒரே அணியிலே திரளுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை என்றார். வேல்முருகன் அவர்கள் தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 

பாரதிய ஜனதா தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அது வெற்றிகரமாக அமையாது என்பதை கடந்த தேர்தலில் மக்கள் உணர்த்தி உள்ளனர். பத்திரப்பதிவு துறையில் கட்டணம் உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு எப்போதும் திமுக கூட்டணி உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார் என்றார். புதிய கல்விக் கொள்கையை திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தது தவறானது ஆகும். 

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து இந்தியா முழுவதும் வரும் 28ஆம் தேதி அம்பேத்கர் அமைப்புகள் பல்வேறு கட்சியினார்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக சென்னையில் வரும் 28ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அம்பேத்கர் அம்பேத்கார் என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்பப்படும். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முழுமையாக போதை பொருளை தடுக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தை கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *