Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவிரி ஆற்றில் நன்னீர் மீன்குஞ்சு பெருவிரலிகள் ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர்

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் இன்று தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கு ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்தல் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் மொத்தம் 4.50 லட்சம் மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்யப்பட்டது.

மேலும், இத்திட்டமானது நாட்டின மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவற்றின் சினைமீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையில் தூண்டுதல் முறையில் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன்குஞ்சுகள் பெருவிரலிகளாக வளர்க்கப்பட்டு மொத்தம் 4.50 இலட்சம் மீன்குஞ்சு பெருவிரலிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இருப்பு செய்யப்பட்டது.

ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும், ஆறுகளின் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை , (Sustainable Stock Maintenance of Native Fish Species in River System), ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் பயன்படுகிறது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி , மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் , ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (திருச்சி மண்டலம்) ரவிச்சந்திரன், உதவி இயக்குநர், குமரேசன், ஆய்வளர்கள் பாஸ்கர், கௌதம், வீரமணிமாருதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *