திருச்சி உறையூர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவர் 300க்கும் மேற்பட்டவர்களிடம் தீபாவளி சீட்டு பணத்தை பிடித்துள்ளார். மாத மாதம் 500 ரூபாயிலிருந்து ஆயிரம், இரண்டாயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் என மாதம் மாதம் பணம் கட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு தீபாவளி முன்பு சீட்டு பணத்தை திருப்பி தர வேண்டும் தொடர்ந்து சீட்டு பணம் கட்டியவர்கள் அவரிடம் கேட்ட பொழுது தருகிறேன் என்று சொல்லிவிட்டு திடீரென பாக்கியலட்சுமி தலைமறைவாகி விட்டார். சீட்டுக்கட்டி ஏமாந்த 300-க்கும் மேற்பட்டோர் உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஒரு சிலர் தனியாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளனர் இந்நிலையில் இன்று திருச்சி பெரியமிளகுபாறை பகுதியில் சீட்டுக்கட்டு ஏமாந்தவர்கள், தலைமுறைவாக இருந்த பாக்கியலட்சுமியை பிடித்து உறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 300 பேரிடம் சுமார் ஒரு கோடி 24 லட்சம் ரூபாய் தீபாவளி சீட்டு நடத்தி பணத்தை வசூல் செய்து ஓராண்டாக தலைமறைவாகி இருந்தார்.
இவர் பிடிபட்ட தகவல் அறிந்த மற்றவர்களும் உறையூர் காவல் நிலையத்தில் கூட துவங்கியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments