திருச்சி: 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் முழு சந்திர கிரகணம் இன்று (07.09.2025) வானில் தென்பட்டது. இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் கண்டுகளிக்க, திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சந்திர கிரகணம் என்பது பௌர்ணமி நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதால் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு. இன்று நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாகத் தொடங்கி, திங்கள்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
சந்திர கிரகணத்தின்போது சிகப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவை ரசிப்பதற்காக, திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். கோளரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த டெலஸ்கோப் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரத்தச் சிவப்பு நிறத்தில் தோன்றிய நிலவின் அழகை வியப்புடன் கண்டுரசித்தனர்.
கோளரங்க இயக்குனர் இரவிக்குமார் மற்றும் மைய ஊழியர்கள் அனைவரும் சந்திர கிரகணம் குறித்த அறிவியல் விளக்கங்களை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினர்.
இதேபோன்ற ஒரு முழு சந்திர கிரகணம் அடுத்து 2028 டிசம்பர் 31ஆம் தேதிதான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments