திருச்சி திருவெறும்பூர் அருகே மகனின் பிறந்த நாளுக்கு கேக் வாங்கிக்கொண்டு பள்ளியிலிருந்துமகனை அழைப்பதற்காகதாயும் தந்தையும் சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சத்யநாராயணன் இவரது மனைவி முத்துலட்சுமி (26) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான் அவன் திருவெறும்பூர் அருகே வேங்கூரில் உள்ள தனியார் பள்ளியில் (செல்லம்மாள்) யுகேஜி படித்து வருகிறான்.
இந்த நிலையில் தனது மகனுக்கு இன்று பிறந்த நாள் என்பதற்காக மகன் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்காக கேக்கை வாங்கிக்கொண்டு சத்திய நாராயணனும் முத்துலட்சுமியும் மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில் துவாக்குடி பகுதியில் இருந்து திருச்சி நோக்கி துவாக்குடி அரசு கலைக் கல்லூரி அருகே சென்ற பொழுது துவாக்குடி பகுதியில் இருந்து திருச்சி நோக்கி பின்னால் வந்த இரண்டு டிப்பர் லாரிகள் போட்டி போட்டு ஒன்றோடு ஒன்று முந்துவதற்காக முயன்ற போது சத்திய நாராயணன் ஒட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி பின்னால் அமர்ந்து இருந்த முத்துலட்சுமி கீழே விழுந்து உள்ளார்.
முத்துலட்சுமியின் மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக முத்துலட்சுமி உயிரிழந்தார்.
தனது மகனுக்கு ஆசையாக வாங்கி வைத்திருந்த கேக்கும் சாலையில் சிதறியது.
இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோலீசார் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கரூர் சீட்டாட்டம் பட்டி தேவர்மலை கிராமத்தைசேர்ந்த லாரி ஓட்டுனர் விஸ்வநாதன் (35)என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மகனின் பிறந்த நாள் தாயின் இறந்த நாளாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments