தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்தில் உயிரிழப்பு, தொட்டியம் போலீசார் விசாரணை.
நிச்சயம் செய்த பெண்ணை பார்க்க சென்ற பொழுது ஏற்பட்ட விபரீதம்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சேலம் முதல் திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வரதராஜபுரம் பிரிவு ரோடு பகுதியில் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் ஹாலோ பிளாக் கடையில் வேலை செய்யும்
சேலம், மேட்டூர், மூலக்காடு, சன்னார்பட்டியைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் (27), தினேஷ் (28) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு மோகன்ராஜிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து நிலையில் இரண்டாவது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு பெண்ணை பார்ப்பதற்கு நண்பருடன் சென்றதாக கூறப்படுகிறது, அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தில் மோதியதில் மோகன்ராஜ், தினேஷ் ஆகிய இருவர் பலத்த இரத்தக் காயங்களுடன் நிகழ்விடத்தில் உயிரிழப்பு, விபத்து குறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் இருவரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments