Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's identities

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு நூற்றாண்டை நிறைவு செய்த  திருச்சி நீதிமன்றம் -ரூ.6.54கோடியில் புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை

 

திருச்சி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட திருச்சி நீதிமன்ற கட்டிடங்களை பாரம்பரிய கட்டிடங்களாக அங்கீ கரித்து, அவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.6.54 கோடியைதமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1804-ம் ஆண்டு வால்டர் கால்பீடு லேன்னனால் திருச்சி புத்தூர் பகுதியில் (தற்போதைய பிஷப் ஹீபர் பள்ளி வளாகம்) குற்றவியல் 100 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் 1900 பிறகு திருச்சி நீதிமன்றம்  நீதிமன்றத்துக்கென தனித்துவ மான வளாகம் அமைக்க ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

இதற்காக கன்டோன்மென்ட்
பகுதியில் பல நூறு ஏக்கர் நிலம் இடம்
தேர்வு செய்யப்பட்டு, 1917-ம்ஆண்டு ஏப்,28-ம் தேதி அப்போதைய மாவட்ட முதன்மை அமர்வு
 நீதிபதியாக இருந்த ஜே.ஜி.பர்ன்
என்பவரால் புதிய நீதிமன்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கிலாந்து அரசின் பாரம்பரிய கட்டிட
வடிவமைப்புடன் ஏ.தாத்தாபிள்ளை
என்ற ஒப்பந்ததாரர் மூலம் இதற்கானகட்டுமானபணிகள்
மேற்கொள்ளப்பட்டன.

மின்சாரத்தைநம்பி இருக்காமல்,சூரிய ஒளி மூலம் வெளிச்சம், இயற்யான காற்று
ஆகியவை போதிய 
அளவுக்கு  கிடைக்கப்பெறும் வகையில் நீதிமன்ற விசாரணை அறைகளும் லண்டனிலிருந்து கொண்டு 
வரப்பட்ட இரும்பு உத்திரங்கள். தூண்கள் மூலம் கட்டிடத்தின் மேற்கூரைகளும் அமைக்கப்பட்டது.
மேலும், தரைத்தளத்தில் இருந்து முதல்தளத்துக்கு செல்ல, மரப் பலகைகளால் ஆன இருபுற படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அழகிய வடிவமைப்புடன் கூடிய இக்கட்டிடத்தை 1919-ம் ஆண்டு ஆக. 16-ம் தேதி நீதிபதி ஜே.ஜி.பர்ன் இந்நிலையில், திறந்துவைத்தார்.

 திருச்சி மட்டுமின்றி அரியலூர், கரூர்உட்பட அப்போதைய ஒருங்கிணைந்த
 திருச்சி மாவட்டத்தில
இருந்த அனைத்து பகுதிகளின்‌‌‌‌ அனைத்து வழக்குகளும் அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டதால் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான வழக்குகள் குவிந்தன பின் நாளிதில் கட்டிடத்தில் இடம் நெருக்கடியை தவிர்ப்பதற்காக குற்றவியல் நீதிமன்றங்கள் குடிமையியல் நீதிமன்றங்கள் விரைவு நீதிமன்றங்கள் நீதிமன்றம் உள்ளிட்டவை இதே வளாகத்தினுள்தனித்தனியாக கட்டப்பட்டன அதனை தொடர்ந்து புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடமும் கட்டப்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றமும் அங்கு மாற்றப்பட்டது இந்நிலையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம் 2019 ஆம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்தது. இதையொட்டி  கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியனர். தற்போது இங்குள்ள நீதிமன்ற பிரதானகட்டிடத்தை பாரம்பரிய கட்டிடமாக அங்கீகரித்து   அதற்கான பட்டியலில் சேர்த்துள்ள தமிழக அரசு இதை புதுப்பிக்க ரூபாய் 3.62 கோடி நிதி ஒதுக்கீடு உத்தரவிட்டுள்ளது மேலும் இதே வளாகத்தில் உள்ள பழமையான மற்றும் நீதிமன்ற கட்டிடங்களை புதுப்பிக்கவும் ரூ.2.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் பொதுப்பணி துறையின் பாரம்பரிய கட்டிட பிரிவு சார்பில் பழமை மாறாமல் கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளனர்.

இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறும்போது தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் விரைவில் ஒப்பந்ததாரரை தேர்வு செய்து இக்கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க உள்ளோம்அதன் பின்னரே கட்டிடம் மீண்டும் நீதிமன்றமாக செயல்பாட்டுக்கு வருமா அல்லது பாரம்பரிய அடையாளச் சின்னமாக மாறுமா என்பதே சட்டத்துறை முடிவு செய்யும் என்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *