கொரோனா தொற்றால் கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கவில்லை. படிப்படியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டது. தமிழக அரசு திரையரங்குகள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்காத நிலையில் வருகின்ற 10ம் தேதி முதல் 50 சதவீத இறக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
Advertisement
வருகின்ற 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் 10-ஆம் தேதியே தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் இன்று தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. கடந்த 7 மாதத்திற்கு மேலாக தியேட்டர்கள் மூடியிருந்ததால் தூசி படிந்து, சேதமடைந்துள்ள இருகைகளை சுத்தம் செய்து, பழுது பார்த்து இருக்கைகளை மாற்றுதல், புரொஜெக்டர்களை சுத்தம் செய்தல், சுவர்களுக்கு வண்ணம் பூசுதல் போன்ற பணிகள் திருச்சியில் இன்று ஜோராக நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தியேட்டர் உரிமையாளர்கள் எடுப்பதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
Advertisement
Comments