திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் உறுப்பினர் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என.நேரு கலந்து கொண்டு பேசிய போது…. லால்குடி தொகுதியில் கடந்த 2006 முதல் 2021 வரை தொடர்ந்து திமுக எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் வெற்றி பெற்று வருகிறார்.

லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பாரிவேந்தர் பச்சமுத்து, என்னை விட 100 மடங்கு வசதி பெற்றவர். அவரை எதிர்த்து போட்டியிட்ட எனது மகன் அருண் நேருவை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. லால்குடி மற்றும் கல்லக்குடியில் அதிகமாக பொதுக்கூட்டங்கள் நடத்தி திமுக கட்சியை வளர்த்து வருகிறோம். லோக்சபா தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை. சீமான் ஒரு புறம், புதிதாக கட்சி ஒருவர் ஆரம்பிக்கிறார் அவர் ஒரு புறம். பாமக தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது.

இப்படி இருக்கும் பொழுது வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலில் உள்ள சூழல் சுமூகமாக இருக்காது. தொடர்ந்து தொண்டர்கள் நிர்வாகிகள் கடுமையாக பணியாற்றி உதயநிதி அவர்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். அதிமுக பொறுத்த வரையில், யார் தலைவர் என்றே தெரியவில்லை. அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. நான் திருச்சி மட்டுமல்ல எங்கு நின்றாலும், எனக்கு முதலில் நினைவுக்கு வருவது லால்குடி தொகுதி தான் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய – மாவட்ட செயலாளர் வைரமணி, எம்எல்ஏ சவுந்திரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பெரியய்யா. சண்முகநாதன். சக்திவேல் பொதுக்குழு உறுப்பினர் விமல், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் முருகவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 03 September, 2024
 03 September, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments