புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு, கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் உலகச் ஷேமத்திற்காக பட்டாச்சாரியார்களால் அனுமன் மூலமந்திரம் இடைவிடாது பாராயணம் செய்யப்பட்டு, ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
ஸ்ரீராம பக்தனான மூலவர் ஆஞ்சநேயர் முத்தங்கி சேவையில் அருள்பாலிக்க, உற்சவர் வெள்ளிக்கவசம் அணிந்து சேவைசாதித்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மூலவர் முத்தங்கி சேவையில் காட்சிதருவார் என்பதால் பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்து நீண்டவரிசையில் நின்று ஆஞ்சநேயபெருமானுக்கு வடை மாலை, துளசி மாலை மற்றும் வெற்றிலைமாலை சாற்றி வழிபட்டுச்சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments