மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களால் 2026-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும். இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரொக்க தொகை ரூ.3,000/- அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினைப் பொறுத்தவரை, நடைமுறையிலுள்ள 8,35,844 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 980 குடும்பங்கள் ஆக மொத்தம் 8,36,824 குடும்பங்களுக்கு 1302 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பினை தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பெற ஏதுவாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு முன்னதாக அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் 04.01.2026 முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் தங்களது குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி / நேரம் ஆகியவற்றினை பின்பற்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள்/ வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.

மேலும், மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0431-2411474, அலைபேசி எண்: 9445045618-ல் தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்கலாம். மாநில அளவில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments