கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் நீதிமன்றம் அருகே உள்ள அவருடைய உருவ சிலைக்கு மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி எம் பி யுமான துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்
நீட் தேர்வில் பல குளருபடிகள் நிலவுகிறது. அந்த தேர்வை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து.
நீட் தேர்வு பல குழப்பங்களை விளைவிக்கிறது.
வருவாய் துறையினரின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என்கிற நம்பிக்கை உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. தமிழகம் முழுதும் நடக்கும் போது வேலை பளு அதிகமாக இருக்கும். ஏழை மக்களின் நலன் கருதி வருவாய் துறையினர் அனுசரித்து செயல்பட வேண்டும்.
மதிமுக சார்பில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக மீண்டு வந்து விட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும்.
அணிதிரள்வோம், ஆர்ப்பரிப்போம், அங்கீகாரத்தை பெறுவோம் என்பது எங்கள் மாநாட்டு முழக்கம். அதை தேர்தலோடு தொடர்புபடுத்த தேவையில்லை அதே நேரத்தில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் எழுச்சி அங்கீகாரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
கூட்டணி கட்சிகளை மாநாட்டிற்கு அழைக்கவில்லை அதே நேரத்தில் மாநாட்டிற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு முழுமையாக இருக்கிறது.
அங்கீகாரம் என்பது தேர்தல் சீட் எண்ணிக்கை மட்டுமல்ல தமிழக மக்களுக்காக பாடுபடும் வைகோ தமிழக மக்களின் மனங்களில் கொண்டு வருவது தான்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என்ன என்பதே அந்த கூட்டணியில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை. கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கவில்லை, தேர்தலில் எத்தனை சீட் உள்ளிட்ட பட்டறை மையப்படுத்தி தான் அவர்கள் கூட்டணி வைத்துள்ளார்கள் திடீரென அந்த கூட்டணியில் சேர்கிறார்கள் திடீரென வெளியேறுகிறார்கள் இது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments