தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் மழை நீர் தேங்கியும் வீடுகளுக்குள் புகுந்தும் உள்ளது.
மேலும் இப்பகுதியில் சுமார் 7 ஆயிரத்து 200 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை கிளியூர் மற்றும் திரு நெடுங்குளம் ஆகிய பகுதியில் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மழை தொடர்ந்து பெய்தால் மேலும் பல நூறு ஏக்கர் விவசாய நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். மேலும் தண்ணீரில் ஏற்கனவே மூழ்கியுள்ள நெற்பயிர்கள் தொடர்ந்து மூழ்கி இருந்தால் அழகும் சூழ்நிலை உருவாகும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இது குறித்து திருவெறும்பூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுகன்யா தேவியிடம் கேட்டபோது….. பாத்தாளப்பேட்டை கிளியூர் ஆகிய பகுதியில் சுமார் 2200 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிற் சாகுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கியுள்ளது என்றும், ஒன்று இரண்டு நாட்கள் நின்றால் எந்தவித பிரச்சனையும் இல்லை கூடுதல் நாட்கள் தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கி இருந்தால் தான் பிரச்சனை ஏற்படும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments