திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் வெடி வைப்பதில் ஏற்பட்ட மோதலில் மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அப்பொழுது அந்த கோவில் திருவிழாவில் அந்த பகுதியை சேர்ந்த சேகர் (57) அவரது மகன் அறிவு (24) அறிவு வெடி வைப்பதற்கு அப்பகுதி மக்கள் நியமித்திருந்ததாகவும் அதன் அடிப்படையில் அறிவு வெடிவைத்து வந்ததாகவும் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்துராமலிங்க மகன் கிஷோர் குமார்
(25), நாகராஜ் மகன் புதின்ராஜ் ( 22 ) ஜான் மகன் ஜோஸ்வா ஜெபக்குமார் (23) ஆகிய மூன்று பேரும் நீ மட்டும் தான் வெடி வைக்க வேண்டுமா ஏன் நாங்கள் வெடி வைக்க கூடாதா வெடியை எங்களிடம் கொடு எனக்கு கேட்டு தகராறு செய்ததாகவும் இந்த நிலையில் அப்படி தகராறு செய்தவர்கள் அறிவின் தந்தை சேகரை தகாத வார்த்தையால் திட்டிவம்புக்கு இழுத்ததாகவும்
அப்பொழுது ஏற்பட்ட மோதலில் சேகர், அறிவு, மற்றும் அறிவின் அக்கா தமிழ் இலக்கிய (27) ஆகிய மூன்று பேரையும் கிஷோர் குமார், புதன் ராஜ், ஜோஸ்வா ஜெபக்குமார் ஆகிய மூன்று பேரும் தாக்கியுள்ளனர். இதில் மூன்று பெரும் காயமடைந்துள்ளனர்.அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அங்கு உள்ளவர்கள் அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் கோவில் திருவிழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அறிவு கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments