திருச்சி மாவட்டம், மணப்பாறை முனியப்பன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் மருதுபாண்டி மனைவி சூர்யாதேவி (28). இவர் சர்ச்சைக்குரிய விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு டிக்டாக்கில் பிரபலமானவர்.
இவர் கடந்த புதன்கிழமை தனது தம்பி தேவா மற்றும் கணவர் மருதுபாண்டி ஆகியோர் தன்னை தலையில் அடித்து காயப்படுத்தியதாக மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின்பேரில் விசாரணைக்காக வியாழக்கிழமை இருத்தரப்பினரும் காவல்நிலையத்தில் ஆஜரானபோது, மதுபோதையில் வந்திருந்த சூர்யாதேவி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சென்றுவிட்டார்.
அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை மீண்டும் காவல்நிலையம் வந்த சூர்யாதேவி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார். மேலும், மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து தன் மேல் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரித்துக் கொள்வதாக போலீஸாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதனையடுத்து பணியில் இருந்த தலைமை காவலர் லாரன்ஸ் அளித்த புகாரின்பேரில், வாதியையும் மற்ற காவலர்களையும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டியதாக மணப்பாறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சூர்யாதேவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மகளிர் சிறையிலடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments