திருச்சி ஸ்ரீனிவாசபெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம் – பெருந்திரளான பக்தர்கள் வழிபாடுதிருச்சி மாநகர் பெரியகடைவீதி பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவரதவேங்கடேசப் பெருமாள் கோவில் 350ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். வேங்கடேசபெருமாள் மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கின்ற இவ்வாலயத்திற்கு பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருகைதந்து வழிபாடு செய்துவருகின்றனர்.
திருமணத்தடை நீக்கும் இவ்வாலயத்தில் சீனிவாசபெருமாள்(மூலவர்) நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார்.
இவ்வாலயத்தில் ஆவணிமாதம் மஹாச்ரவண நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீனிவாசபெருமாள் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆலயத்தில் இன்று ஸ்ரீனிவாசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளினார். சிறப்பு யாகங்களைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க நாதஸ்வரம் இசைக்க திருமாங்கல்யதாரணம் மற்றும் பல்வேறு வைபவங்களைத்தொடர்ந்து ஸ்ரீனிவாசபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால் திருமண வைபவம் கைகூடும் என்பதால் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு வைபத்தைக் கண்டு, நம்பெருமாளை வலம்வந்து வழிபட்டுச் சென்றனர்.
தொடர்ந்து திருக்கல்யாண வைபவபத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments